திருச்சியில் நடைபெற இருந்த மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ரத்து.மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ அறிவிப்பு.
திருச்சியில் நடைபெறவிருந்த இளையோர்
தடகளப் போட்டிகள் ரத்து.
திருச்சியில் நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டிகள், தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தடகளச் சங்க செயலாளர் டி. ராஜூ தெரிவித்திருப்பது:
திருச்சி மாவட்ட தடகளச் சங்கம், நியூரோ ஒன் மருத்துவமனை, ஆப்பிள் மில்லட் உள்ளிட்டவை இணைந்து, இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ். மோகன் நினைவு சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை நவம்பர் 10, 11 தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் 12 ,14,16,18, 20 வயதுக்கு கீழுள்ள இருபாலருக்கான போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் வடகிழக்கு பருவமழை திருச்சி மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.