திருச்சியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்ணை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்
திருச்சியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்ணை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் திறந்துவிடப்பட்ட அணை பெருமளவு மற்றும் கபினி அணைகளிலிருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது,
மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
எனவே, வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று (08.11.2021) மாலை 6.00 மணிக்கு திறந்துவிடப்படுகிறது.

கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவேரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” (selfie) எடுக்க அனுமதி இல்லை.
வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம்.TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, தெரிவித்துள்ளார்.