Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் குவிந்த குப்பைகள்.

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் குவிந்த குப்பைகள்.

0

'- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு திருச்சி
மாநகரில் குவிந்த 600 டன் குப்பை.

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி குவிந்த சுமார் 600 டன் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் பெருமளவு அப்புறப்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரில் சராசரியாக தினசரி சுமார் 450 டன் குப்பைகள் சேகரமாகி வருகின்றன. அவற்றை லாரிகள் மூலம் துப்புரவுப பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தினசரி அகற்றி வருகின்றது.

பண்டிகை காலங்களில் மேலும் அதிகளவில் குப்பைகள் குவிவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மேலும் அதிகளவில் குப்பைகள் சேர்வது வழக்கம்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இரு நாள்களில் சுமார் 210 டன் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளன.

திருச்சி காந்தி மார்க்கெட், பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, என் எஸ் பி சாலை, ஆண்டார் வீதி, கீழ மற்றும் மேலரண் சாலைகள், ஜாபர்ஷா வீதி, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், தில்லைநகர், உறையூர், புத்தூர், கே கே நகர், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பைகள் ஆங்காங்கே பெருமளவில் குவிந்தன.

அவற்றை பகுதி பகுதியாக துப்புரவுப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். முதல் கட்டமாக முக்கிய நகர்புறப் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு பின்னர் வேறு பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

இதில், ஜவுளி நிறுவனங்களில் ஆடைகள் வாங்குவதால் ஏற்படும் குப்பைகள், பட்டாசு உள்ளிட்டவைகளால் குவிந்த குப்பைகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.