விலங்குகள் நலனுக்கு என்று தனி அமைச்சகம் தொடங்க வேண்டும் திருச்சி ப்ளூ கிராஸ் உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்.
விலங்குகள் நலனுக்கு என்று தனி அமைச்சகம் தொடங்க வேண்டும் திருச்சி ப்ளூ கிராஸ் உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்.
ஃப்ளூ க்ராஸ் ஆஃப் திருச்சியின் உறுப்பினர் கூட்டம் நேற்று மாலை செய்ன்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அருட்தந்தை யூஜின் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் மார்டின், புருஷோத்தமன் மற்றும் திருவாளர்கள் மணிகண்டன், குமரன், ராமநாதன், பிரபு, ஜோஷி, புகழேந்தி, கண்மலை எடிசன், உபயத்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தெய்வகுமார் வரவேற்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

1. விலங்கு நலனுக்கென்று மத்திய, மாநில அளவில் ஒரு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி மக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று பிரதமர் மற்றும் முதல்வருக்கு அனுப்புவது.
2. சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபடி விலங்கு தங்குமிடம் அமைக்க இடம் ஒதுக்கக் கோரி மீண்டும் அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மனு கொடுப்பது.
3. தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை (ABC) -யை வேகப்படுத்த மாநகராட்சியிடம் கோருவது.
4. தெருவில் உள்ள விலங்குகளுக்கான ‘டெலிமெடிசன்’ சேவையை ப்ளூ க்ராஸ் ஆஃப் திருச்சி மூலம் துவங்குவது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் தலைவர் பழனி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.