தெற்கு ரயில்வேயில் 2வது சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி தேர்வு.
தெற்கு ரயில்வேயில் 2வது சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி தேர்வு.
தெற்கு ரயில்வேயில் சிறந்த செயல்பாடு :
திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 2 ஆம் பரிசு.
தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் 66 ஆவது விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 10 முதல் 16 வரை ரயில்வே வாரவிழா கொண்டாடப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இவ்விழா சென்னை ஐ சி எஃப் டாக்டர் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்றது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் தலைமை வகித்தார். கூடுதல் பொது மேலாளர் பி.ஜி. மல்லையா முன்னிலை வகித்தார். இதில் ஓட்டு மொத்த செயல்பாடுகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்பரிசை சேலம் கோட்டம் பெற்றது.
இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றது. அதற்கான விருதை, பொது மேலாளர் ஜான் தாமஸிடமிருந்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மணீஸ் அகர்வால் பெற்றுக்கொண்டார்.