திரைப்பட நடிகர் வேல்முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தமிழக பாரதிய ஜனதாவில் தமிழக திரைத்துறையை சேர்ந்த ராதாரவி , காயத்ரி ரகுராம், குஷ்பூ பலரும் வரிசையாக இனைந்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது
திருச்சியை சேர்ந்த திரைப்பட நடிகர் மற்றும் செய்தியாளர் வேல்முருகன் திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில், மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் ( எ) சுதாகர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், இதனைத் தொடர்ந்து பல கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாநகர் மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், பொதுச் செயலாளர்கள்
பெருமாள் சங்கர் , ஒண்டி முத்து மற்றும் மாவட்ட துணை தலைவர் (பிஸ்கட்) பாலமுருகனை ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.