Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குண்டும் குழியுமாக உள்ளக காவேரி மேம்பாலம் உடனடியாக சீரமைக்கப்படுமா ?

0

'- Advertisement -

திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.

பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பாலத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

 

மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியையும், அரங்கன் பள்ளி கொண்டுள்ள 108 திவ்ய தேசங்களில் முதன்மையான புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம். பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.

Suresh

44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்கும் விரிவாக்க தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுகிறது. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணரமுடியும்.

இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விரிவாக்க தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை முழுமையான பலனை தரவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள். நவீன தொழில்நுட்ப முறையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தை தாங்கி நிற்கும் ஆறு தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கியது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று உள்ளன. ஆனாலும் இன்னும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்து சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது இவற்றையும் உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.