திருச்சியில் பிஜேபி இளைஞரணி செயற்குழு மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது
திருச்சியில் பிஜேபி இளைஞரணி செயற்குழு மற்றும் ஊழியர் கூட்டம் நடைபெற்றது
திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட இளைஞரணி செயற்குழு மற்றும் ஊழியர் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் (எ)சுதாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த்,மாநில செயலாளர் பார்வதி நடராஜன், பொது செயலாளர்கள் பெருமாள், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், மாவட்ட அவைத் தலைவர் பாலமுருகன், இளைஞரணி மாநில செயற்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் கதிரவன் கலந்து கொண்டார்.
மேலும் இளைஞர் அணி செயலாளர் சிபி, நேரு இளைஞரணி நிர்வாகிகள் திலக், ராகவன், பிரசாத், கோபி, நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன,
இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் இளைஞர்களை முன்னேற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை, குறிப்பாக திறன் மேம்பாடு இளந்தொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டம், பிட் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரத பிரதமர் நரேந்திர இந்த இளைஞர் அணி மாவட்ட பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்திய இளைஞர்களின் கல்வி தரம் சர்வதேச தரத்திற்கு உயர வித்திடும் புதிய தேசிய கல்வி கொள்கையினை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த இளைஞர் அணி மாவட்ட செயற்குழு பாராட்டுதல்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றது.
3. இந்தியாவிலேயே தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளால் அடிக்கல் நாட்டப்பட்ட பழமையான வரலாற்று சிறப்புவாய்ந்த காந்தி மார்க்கெட்டை அப்புறபடுத்த நினைக்காமல், அதற்கு காரணமான சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை களைந்து அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
4. தமிழ் மாமன்னர் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டு திருச்சியின் அடையாளமாய் விளங்கும் உய்யக்கொண்டான் பாசன வாய்க்கால் தற்பொழுது கழிவுநீர் கால்வாயாக உருமாறி காட்சியளிப்பதால் உய்யக்கொண்டான் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் கலப்பதனை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைபடுத்தி மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமைக்கு அணி சேர்த்து திருச்சியின் அழகியல் வடிவமாய் உய்யக்கொண்டான் வாய்க்காலை சீர்படுத்திட வேண்டுமாய் தமிழக அரசையும், மாவட்ட ஆட்சியர் அவர்களையும் இந்த இளைஞர் ஆணி மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது,
5. தமிழக இளைஞர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனப்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தையும், தமிழகத்தின் வளர்ச்சியும் சீரழிக்கும் டாஸ்மாக் எனும் அரக்கனை ஒழித்து தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது,
6, திருச்சி மாநகராட்சியில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் அம்ருத் திட்டத்தின் கீழ் மிக அதிக பொருட் செலவில் அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா பராமரிப்பின்றி, சேதமடைந்து காணப்படுகிறது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிக அதிகமான நிதியினை திருச்சி மாநகராட்சி பெறும் நிலையில் திருச்சியில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குப்பையும் , கூளமாகவும் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் முழுமையாகவும் நேர்மையாகவும் நடைபெறாததால் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி அறுபதாம் இடத்தில் இருப்பது வேதனை அளிக்கின்றது. ஆகவே இந்த நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மத்திய அரசின் திட்டங்களின் இதில் நடைபெறும் பணிகளை முறையாக திறன்பட செய்து திருச்சி மாநகராட்சி முதலிடத்தில் கொண்டுவர தமிழக அரசையும், திருச்சி மாநகராட்சி ஆணையரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7. திருச்சி மாநகரின் மழைநீர் வடிகால்களை தூர்வாரி பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்திலிருந்து மாநகர மக்களை காத்திருப்பதும் திருச்சி மாநகராட்சியை கேட்டுக்கொள்ளபடுகிறது.