வஉசி சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
வஉசி சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளை முன்னிட்டு, கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு, திமுக.மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநகர செயலாளர் மு.அன்பழகன், வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ், பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம், , பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ மற்றும் டோல்கேட் சுப்ரமணி புஷ்பராஜ , சிந்தை பாலமுருகன், பந்தல் ராமு, கருமண்டபம் சுரேஷ், பரமசிவம், கருத்து கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.