ஜெ. சீனிவாசன் தலைமையில் அமமுகவினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெ. சீனிவாசன் தலைமையில் அமமுகவினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளை முன்னிட்டு, கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் மனோகரன், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, சேட்டு, சொக்கலிங்கம், என்ஜீனியர் ரமேஷ், தன சிங், ஸ்பீடு வேலு, வக்கீல்கள் மணிவண்ணன், சரவணன், தினேஷ்பாபு, சித்ரா, சையது இபுராகிம், செந்தில் பஞ்சநாதன், சங்கர், சதீஷ்குமார், வேதாத்ரி நகர்பாலு, வேதராஜன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.