Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதியோர் இல்லத்தில் கலந்துரையாடிய சாரநாதன் கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள்.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட

அமைப்பானது, தங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர்

இல்லம்/குழந்தைகள் காப்பகம்/மனநல காப்பகம் ஆகியவற்றை பார்வையிட திட்டமிட்டிருந்தது.

அதன்படி திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதுரில் உள்ள
ஹீட் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் “கங்காரு” முதியோர் இல்லத்தைப் பார்வையிட சென்றனர்.

 

இந்நிகழ்விற்கு காப்பகத்தின் நிர்வாக இயக்குநர் சி.ஆர்.ராஜா மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இம்முதியோர் இல்லத்தில் சுமார் 100 நபர்கள் இருந்தனர். நிகழ்வின் போது நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இல்லத்தில் தங்கியுள்ளோருடன் கலந்துரையாடினர்.

Suresh

இதன் மூலமாக, அவர்கள் எப்படி இதுபோன்ற இல்லங்களுக்கு வந்தனர் என்றும் அவர்களின் தற்போதைய எண்ணங்கள், ஆசைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடிந்தது எனவும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும், வயது முதிர்ந்தோரை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இல்ல பொறுப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும், இவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதை குறைக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனவும் தெரிவித்தனர்.

கங்காரு
(முதியோர் இல்லம்) அமைப்பின் அரவணைப்பில்
உள்ளவர்களுக்கு சாரநாதன்
பொறியியல் கல்லூரியின்
நாட்டு
நலப்பணி திட்டத்தின் சார்பாக ரூ.7000 மதிப்பிலான மளிகைப் பொருட்களை 39 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் தாமாக முன்வந்து வழங்கினர்.

நிர்வாக இயக்குநர் சி.ஆர்.ராஜா பேசுகையில்:

முதியோர் இல்லங்களின் அவசியம் இதனை நடத்துவதில் உள்ள சிரமங்கள் மற்றும்
இவற்றை எதிர் கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும்
விளக்கமளித்தார்.

முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதில் இருப்போரின்
எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்து வருவதாகவும், முதியோர் இல்லங்களில்

தங்கியிருப்போரின் உறவினர்களோடு அவர்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஆசையை தற்போது மாணவர்களிடம் ஏற்பட்ட சந்திப்பு பூர்த்தி செய்துள்ளது,
முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதை குறைக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்,
என்று மாணவர்கள் கூறுவது பாராட்டத்தக்கது என மாணவர்களை வாழ்த்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாணவர்கள் செய்யும்
உதவிகள் தம்மை நெகிழச் செய்துள்ளதாகவும் அவர்களின் சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும், சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தலைமைப் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் பாராட்டுவதாகவும் கூறினார்.

மேலும், சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கும், நாட்டு நலப்ணித்திட்ட அமைப்பிற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.