ஸ்ரீராங்கத்தில் திக கொடி ஏற்றிய 25 பகுதிகளிலும் அகில இந்திய இந்து மகா கொடி ஏற்ற முடிவு.மாவட்ட தலைவர் மணிகண்டன் அறிக்கை.
அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை :
கடந்த 17தேதி ராமசாமி அவர்களின் பிறந்தநாள் தினத்தன்று திகவினர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவனைகோவில் பகுதியில் 25 இடங்களுக்கு மேல் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றி உள்ளனர்.
மாநகராட்சி இடமோ அல்லது கலெக்டரிடமோ எந்த ஒர் அனுமதியும் பெறாமல் கொடிக்கம்பம் நாட்டு கொடியை ஏற்றி உள்ளனர்.
இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் .
.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திகவினர் கொடியேற்றி உள்ள பகுதியில் கொடியேற்ற யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று தெரியவருகிறது.
ஆகையால் அதே பகுதியில் அதே இடத்தில் அகில இந்திய இந்து மகாசபா 25 கொடி கம்பங்கள் நடுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று தெரியவருகிறது .
ஆகையால் அகில இந்திய இந்து மகா சபாவும் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் அகில இந்திய இந்து மகா சபா சார்பாக 25 இடங்களிலும் கொடி கம்பம் நட்டு கொடியேற்றி சிறப்பான விழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு மணிகண்டன் ஜி
அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட தலைவர் 7871361977