இடைநிற்றல் இல்லா தமிழகம்.
ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி திருச்சி மாவட்டம்
கல்வி கற்கும் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பள்ளியைவிட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் சூழ்நிலை இடைநிற்றல் என்கிறோம்
தமிழகத்தில் இடைநிற்றல் இல்லா நிலையை 100 சதவிகிதம் எட்டுவதற்கும்
மாணவ மாணவிகள் 100 சதவிகித கல்வியறிவு பெறுவதற்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை மிகுந்த முயற்சி எடுத்து வருகிறது.
ஒவ்வொரு பள்ளியும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் இணைந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தார், சமூக ஆர்வலர், ஊடகவியலார்கள் என அனைவரின் துணையோடு
மாபெரும் இயக்கமாக மாறி இடைநின்ற மாணவர்களை இனம் கண்டு அவர்களை வீடு தேடிச் சென்று அலோசனை அளித்து அம் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இடை நிற்றலைத் தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்தி வரும் திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி அவர்கள் அனைத்து பள்ளிகளும் தனிக்கவனம் செலுத்தி இடைநிற்றலைத் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
அவ்வகையில் ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சற்குணன் தலைமையில் இடைநின்ற மாணவர் மற்றும் அவரது பெற்றோர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்கும் நிகழ்வு கடந்த பல நாட்களாக நடைபெற்று வருகிறது.
பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் செல்வராஜ் அவர்களின் தகவலின் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிச்செல்லாத சிறுமி ப.ஜெயலெட்சுமி 9 ஆம் வகுப்பில் இடைநின்ற விபரம் அறியப்பட்டு அவரை மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று உலக ஓசோன் தினம் என்பதால் சிறுமி கையால் பள்ளி வளாகத்தில் மரம் நடப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் குப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தார்க்கும் நன்றி தெரிவித்தனர்.