நடிகர் ஜெயம் ரவியின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முதல் வருடமாக திருச்சி மாவட்ட ஜெயம்ரவி ரசிகர் மன்ற தலைவர் சரண்ராஜ் தலைமையில்
செயலாளர் சுரேஷ்,பொருளாளர் லோகேஷ், துணைத்தலைவர் குகன், துணை செயலாளர் கோபி முன்னிலையில்
50க்கும் மேற்பட்ட ஜெயம் ரவி ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.
பின்னர் மாவட்ட தலைவர் சரன் ராஜ் கூறுகையில் இந்த வருடம் முதல் முறையாக ரத்த தானம் செய்துள்ளார்.
இனி வருடாவருடம் பொதுமக்கள் அனைவருக்கும் திருச்சி மாவட்ட ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் செய்ய தயாராகி வருகிறோம் எனக் கூறினார்.