*சுதந்திர போராட்ட தியாகி* *வ.உ.சிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்* *சுதேசி வேளாளர் பேரவை கோரிக்கை* சுதேசி வேளாளர் பேரவை,தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன், தியாகி வ.உ.சி. தொழிலாளர் சங்க நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழன் தலைநிமிர்ந்து வாழ தன்னுடைய சொத்துக்களை இழந்து வெள்ளையனை எதிர்த்து போராடி தமிழின மக்களுக்கு பெருமை சேர்த்த *சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிள்ளையின்* பெருமைகளை உணர்ந்து இந்து வேளாளர் இளைஞர் கழகத்தை ஆரம்பக்கட்டத்தில் தொடங்கினேன்.
பிறகு அதனை வெள்ளாளர் முன்னேற்ற கழகமாக மாற்றினேன். அப்பொழுது வ.உ.சி. சிலை அமைக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும், செவி சாய்க்காத காரணத்தால் *திருச்சியில் செக் இழுக்கும் போராட்டம் என்னுடைய தலைமையில் நடந்தது.* அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் பிள்ளை,முன்னாள் எம்எல்ஏ மலர்மன்னன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து எங்கள் அமைப்புடன் போராடினார்கள்.
*இதற்காக பஸ் மறியல் செய்து கைது செய்யப்பட்டு சிறையில் கூட இருந்துள்ளேன்*. தமிழகத்திலுள்ள அனைத்து வெள்ளாளர் சங்கங்களும் ஒன்றிணைந்து வ.உ.சியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அனைவரும் ஒன்றினயைும் வகையில், புதுக்கோட்டையை சேர்ந்த லேனா முருகானந்தம் தலைமையில் *அகில இந்திய வ.உ.சி பேரவை உருவாக்கப்பட்டது.*
இதில் என் அமைப்பையும் இணைத்துக்கொண்டேன். அதில் *அகில இந்திய வ.உ.சி பேரவையின் இளைஞரணி தலைவராக செயல்பட் வந்தேன்* அப்போது *திருச்சியில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தினோம்*.
பல்வேறு சோதனைகளை கடந்து ஒரு கட்டத்தில் *திருச்சியில் வ.உ.சி. சிலை அமைத்தோம்.* இன்றைக்கு வ.உசி யின் *150-வது பிறந்த நாள் விழாவை* கொண்டாடும் சூழ்நிலையில் ,தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் வ. உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு *பல்வேறு 14 அம்ச அறிவிப்புகளை* அறிவித்த தமிழக முதலமைச்சர் *முக ஸ்டாலினுக்கு* இந்த நேரத்தில் *நன்றியை* தெரிவித்து கொள்கிறோம்.
அதே சமயத்தில் வ.உ. சி. யின் 150-வது பிறந்த நாள் விழாவில் மேலும் அவரது புகழை பறைசாற்றும் வகையில் நடப்பு *சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் தலைமையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.வுக்கு பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்* .மேலும் *தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தமிழக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதியை சந்தித்து வ.உ.சிக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
மேலும் திமுக தலைவர் *கருணாநிதி* முதலமைச்சராக இருந்தபொழுது வ.உ. சி யின் பேத்தி *அன்னலட்சுமி* திருச்சியில் வறுமை மற்றும் நோயால் வாடியபோது எங்களுடைய அமைப்பின் சார்பில் அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த மூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தோம். மேலும் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த *கருணாநிதி* நடவடிக்கை எடுத்து அன்னலட்சுமிக்கு ரூபாய் *ஒரு லட்சம்* நிவாரண உதவி வழங்கினார்.
அதுபோல தற்போது *வ. உ.சி.யின் வாரிசுதாரர்கள்* பலர் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் *வையாபுரி* தெரிவித்துள்ளார்.