1.
தில்லை நகர் ,கோட்டை பகுதியில்
வீடு, கடையில் திருடிய
3 பேர் சிக்கினர் .
நகை, சிலிண்டர் பறிமுதல்.
திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மேனகா (வயது 67) இவர்கள் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமாரின் மனைவி நாகலட்சுமி என்ற பெண் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை திருடி விட்டார். இதுகுறித்து மேனகா கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து வீட்டு வேலைக்கார பெண் நாக லட்சுமியை கைது செய்து தங்க நகையை பறிமுதல் செய்தார்
2.
டிபன் கடையில் திருட்டு.
திருச்சி உறையூர் வைக்கோல் கார தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 56) இவர் தென்னூர் ஹை ரோடு அரசமரத்தடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சிலிண்டரை திருடியதாக தில்லை நகர் போலீசில் தங்கதுரை புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்கு பதிந்து சிலிண்டரை திருடியதாக யார்ஷாத்பாபு ,சபி அகமத் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சிலிண்டரை பறிமுதல் செய்தனர்
இதேபோல் திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக யார்ஷாத் பாபு ,சபீ அகமது ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
3.
திருச்சி விமான நிலையத்தில்
தூக்கு போட்டு பெயிண்டர் தற்கொலை.
போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 19) பெயிண்டர் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை
.இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் இறந்துவிட்டார் இதுகுறித்து ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்