அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாநில இணை இயக்குனர் செல்வராஜ் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு:அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயமாக தொடர்ந்து பின்பற்ற கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் மாநில இணை இயக்குனர் சி.செல்வராஜ் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் மாநில இணை இயக்குனர் சி.செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக தொடர்ந்து பின்பற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதலில் வல்லத்திராக்கோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா?
ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் பதிவு, வருகை, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா? பள்ளி வளாகம், கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? மாணவர்களின் வாசித்தல் திறன், சோப்பு நீர், சானிடைசர் கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்கிறார்களா? மாணவர்களுக்கான சத்துணவு சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? ஆகியவை உள்ளிட்ட அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா ? என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து எஸ்.குளவாய்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தார்.
பின்னர் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்துள்ளமைக்காக தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார். பின்னர் அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் சத்துணவு சாப்பீடுகிறார்களா
என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதிகாரியின் ஆய்வின்போது அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் செல்வம், தலைமையாசிரியர்கள் உடன் இருந்தனர்.