திமுக அரசை கண்டித்து திருச்சியில் மா.மா.செ. வெல்லமண்டி நடராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் .

திருச்சியில் அதிமுக வினர்
இன்று சாலை மறியல்.

விழுப்புரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பது தொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழங்கள் சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார்.
இதை கண்டித்து அதிமுக எம்எல்ஏ க்கள் சட்டமன்றத் திலிருந்து வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்கம் எதிரில் உள்ள திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்து கைதாயினர்.
இதேபோல் திருச்சியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் தென்னூர் ஸான்ஸ் ஹோட்டல் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.
திமுக அரசை கண்டித்தும்,புதிய சட்டமுன்வடிவை திரும்பப் பெறக் கோரியும்,கைது செய்த போலீஸாரை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்த மறியலில் அதிமுக பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், புத்தூர் நகரக்கூட்டுறவு தலைவர் அக்தர் பெருமாள்,முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா,கணேசன் சந்துகடை சந்துரு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாமடம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர்
இந்த சம்பவத்தால் தென்னூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது




