திருச்சி மத்திய சிறையில் போலீசாரின் அதிரடி சோதனையில் செல்போன் சிக்கியது.
திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் இந்த சோதனையில் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
திருச்சி மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.இந்நிலையில் அவ்வப்போது கைதிகளிடம் போலீசார் திடீரென்று அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். இந்நிலையில்
மத்திய சிறையில் சிறை அலுவலராகப் பணியாற்றி வரும் வெங்கட சுப்பிரமணி என்பவருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 24 ஆம் தேதி சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது சிறை வளாகத்தில் உள்ள 10-வது பிளாக் அரச மரத்தின் அருகில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிம் கார்டு இல்லாத ஒரு செல்போன் மற்றும் பேட்டரி ஆகியவை அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. 
இதுகுறித்து சிறை அலுவலர் வெங்கட சுப்பிரமணி கே .கே .நகர் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார்அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த செல்போனை அங்கு வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

