திருச்சி மத்திய சிறைச்சாலையில் வார்டனாகப் பணிபுரிந்து வந்த, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 47) என்பவர், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள காவலர் குடியிருப்பில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் இருந்த அவர், வீட்டிற்குள் சடலமாகக் கிடந்துள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் குடியிருப்பவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ரமேஷ் இருந்த வீட்டைத் திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

