Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராபிடோ இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வாலிபரிடம் பணம் செல்போன் பறித்த ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது..

0

'- Advertisement -

ராபிடோ இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வாலிபரிடம் பணம் செல்போன் பறித்த ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது..

Ad banner

மதுரை மேலூர் சிவகங்கை ரோடு முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சுல்தான் (வயது 32) இவர் திருச்சி பாலக்கரையில் உள்ளபிரபல சலூனில் மேலாளராகப் பணிபுரிகிறார். அதே சலூனில் சமத் என்பவரும் பணிபுரிகிறார்.

சமத் பாலக்கரை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒயர்லெஸ் சாலைக்குச் செல்ல ‘ராபிடோ’ இருசக்கர வாகனத்தைப் பதிவு செய்து பயணம் செய்தார்.

டிவிஎஸ் டோல்கேட் அருகே, பொன்மலை சர்வீஸ் சாலையில் உள்ள ‘பனானா லீஃப்’ ஹோட்டல் பகுதிக்கு வந்தடைந்த போது, ​​ராபிடோ வாகன ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவர் மற்றொரு நபருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். உடனே மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார் பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து சமத்திடமிருந்து ரூ.4,900 ரூபாய் ரொக்கப் பணத்தையும், விவோ ரக செல்போனையும்

பறித்துவிட்டு தப்பிச்சென்றனர் … பின்னர் இது குறித்து முகமது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராபிடோ ஓட்டுநர் கோட்டை ஜீவா நகர் காமராஜர் தெரு பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 20) மற்றும் சிங்காரத்தோப்பு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 19) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.