திருச்சி அருகே
காவிரியில் தத்தளித்து வந்த மூதாட்டியை மீட்ட கிராம மக்கள். மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
திருச்சி கல்லணை சாலையில் தங்கையன் கோவில் அருகே காவிரி ஆற்றுப் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காவிரி ஆற்றில் தத்தளித்த நிலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்பகுதி மக்கள் பார்த்து உடனடியாக மூதாட்டியை மீட்டனர் .
மீட்ட சிறிது நேரத்திற்குள் மூதாட்டி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது தெரியவில்லை .
கைகால் கழுவுவதற்காக வந்தவர் தண்ணீரில் அடித்து வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது .
இது குறித்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்