புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன்,கோவிந்தராசு ( வயது 46 )
கடந்த12.10.26 ஆம் தேதி திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வந்த போது நடைமேடையில் குடிபோதையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க 3 ஆண் நபர்கள் தன்னையும் தன் நண்பர் மகாதேவனையும் தகாத வார்த்தைகளை திட்டி அருவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டது
இது தொடர்பாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு எதிரியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களோடு இணைந்து தேடி வந்த நிலையில் கடந்த 15.10.26 ஆம் தேதி திருச்சி வாமடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தங்க குமார் (வயது 27) என்பவரை கைது செய்து 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைத்த நிலையில் 
நேற்று சனிக்கிழமை (17.10 26. ) இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டாம் எதிரி மாரியப்பன் என்னும் எலி மாரியப்பன் (வயது 23) என்பவரை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் ஆணை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

