திருச்சியில் இன்று காலை தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி
இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபரிதம்
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது தனியார் பஸ் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இன்று காலை நடந்த விபத்து சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 50) இவரது மகன் ரஞ்சித் இருவரும் இன்று காலை மண்ணச்சநல்லூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர் ஒருவருக்கு சாப்பாடு கொடுக்க உணவு எடுத்துக்கொண்டு இன்று காலை வந்தனர். இருசக்கர வாகனத்தை மகன் ரஞ்சித் ஓட்டி வர பின் சீட்டில் அவரது தாய் உட்கார்ந்து வந்தார். அவர்கள் வாகனம் காவிரி பாலத்தை தாண்டி சத்திரம் பேருந்து நிலையம் சாலை வழியாக வந்த பொழுது இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து லால்குடியில் இருந்து தனியார் பஸ் ஒரே திசையில்
சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது தனியார் ஓட்டல் எதிரே உள்ள சாலையில் இருசக்கர வாகனம் வந்த பொழுது திடீரென்று இடது புறமாக பஸ்சை ரஞ்சித் மூந்திக் கொண்டு சென்றார்.அப்பொழுது ரஞ்சித் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் இடது புறமாக கீழே விழுந்தார். இதையடுத்து பின்னால் அமர்ந்திருந்த ரேவதி வலது புறமாக கீழே விழும் பொழுது தனியார் பஸ் சக்கரத்தின் கீழ் விழுந்தார்.இதில் ரேவதி தலை, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரஞ்சித் காலில் அடிபட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
பஸ் சக்கரத்தில் தலை நசிங்கி இறந்த ரேவதி உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் இறந்த சம்பவம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

