திருச்சி இருப்புப் பாதை, கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்களின் உத்தரவுப்படி நேற்று சனிக்கிழமை 03/10/26 ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம்,மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் வண்டி திருச்சி வந்த போது சோதனை மேற்கொள்ளப்பட்டது
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை ரயிலின் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ததில் முன்புற பொதுப்பெட்டியின் இருக்கைக்கு கீழ் கேட்பாரற்று கிடந்த1 சாக்கு பை, இருந்ததை சோதனை மேற்கொண்டதில் 23 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன ,
அவற்றை பறிமுதல் செய்து திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

