கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் திருச்சி பொன்மலை பகுதியில் அமைந்துள்ள ஜி கார்னர் பகுதி மைதானத்தில் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்,
விளையாடிக் கொண்டிருந்த அனைத்து இளைஞர்களையும் அழைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்க வைத்து பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் நிக்சன் கொரோனா மூன்றாம் அலை குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடித்து விளையாட வேண்டும்,
கிரிக்கெட் பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடும் மட்டை ஆகியவற்றினை சனிடைசர் கொண்டு சுத்தம் செய்து விளையாட வேண்டும்,
கிரிக்கெட் விளையாடும்
பொழுது இளைஞர்கள் வெற்றி பெறும் பொழுது ஒருவருக்கொருவர் கைகளைத் தட்டிக்கொண்டு விளையாடுவார்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,
உங்களது விளையாட்டுத் தனத்தினால் வீட்டில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்,
வெளியில் எங்கு சென்றாலும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், அத்துடன் தமிழக அரசு வெளியிடும் கொரோனா விழிப்புணர்களை அறிந்து அதனை முறையாக பின்பற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
சமூக நல உடன் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் நிக்சனின் இந்த செயலைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.