திருச்சியில் மறைந்த நமது இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு மாற்றம் அமைப்பு ராக்போர்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நினைவஞ்சலி மற்றும் புகழஞ்சலி நிகழ்வும் மற்றும் அகாடமியில் விளையாட்டு பயிற்சி பெரும் வீரர் வீராங்கனைகளுக்கு பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு பொன்மலை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடகள விளையாட்டு வீரர் ,வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு பழவகையிலான மரகன்றுகளை வழங்கினார்.
சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளரும் ராக்போர்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகியுமான மணிகண்ட ஆறுமுகம் தலைமை தாங்கினார் .
தேசிய தடகள விளையாட்டு வீரர் இலக்கியதாசன் விக்கி தனியா ,ஸ்வாதி, மஹா, ஆண்டனி, ஹரிசஞ்சய் மற்றும் திரளான தடகள விளையாட்டு பயிற்சி பெரும் வீரர் வீராங்கனைகள் அவர்களது பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அய்யா அவர்கள் வாழ்ந்த காலதத்தில் நமது இந்தியநாட்டின் வளமான எதிர்காலம் இளைஞர்களிடம் தான் உள்ளது என்று உறுதியாக நம்பினார்.
அதை மெய்பிக்கும் வகையில் அனைவரும் அந்த இலக்கை அடைய முயற்சி செய்வதென உறுதிமொழி எடுக்கப்பட்டது..