Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 4 லாட்டரி வியாபாரிகள் கைது. இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள் தான்,வின்னிங் பணம் தரும் பெரும் பண முதலைகள் யாரும் கைது செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

0

'- Advertisement -

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் உள்ளிட்ட 8 பேர் கைது .

Ad banner

ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற லால்குடி தாளக்குடி எஸ் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூபாய் 2100 பணம் மற்றும் நோக்கியா செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதேபோன்று பாலக்கரை துரைசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே லாட்டரி சீட்டு விற்ற உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (வயது 28) என்பவரை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் லாட்டரி சீட்டுகள் ,ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது மேலும் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறையூர் அரச மரத்தடி டாக்கர் ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற திருச்சி மருதாண்ட குறிச்சி குழுமணி ரோடு லிங்கம் நகர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 46) உறையூர் மேட்டு தெரு ரேஷன் கடை அருகே லாட்டரி சீட்டு விற்ற உறையூர் சாலை ரோடு அச்சுக்கட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரசூல் முகமது ( வயது 45 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் மேலும் ஸ்ரீரங்கம் மேல கொண்டையம்பட்டி பிள்ளையார் கோவில் தெற்கு தெரு பகுதியில் பணம் வைத்த சூதாடிய பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அருண் ( வயது 41 ) விக்னேஷ் (35 )செல்வராஜ் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டது மேலும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் திருச்சி ஜெயில் ரயில்வே ஜங்ஷன் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த முகில் (வயது 21 ) என்பவரை கைது செய்து உள்ளனர்.

திருச்சியில் லாட்டரி வியாபாரிகள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது .இவர்கள் அனைவரும் 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதுபவர்கள் தான்,வின்னிங் பணம் தரும் பெரும் பண முதலைகள் யாரும் கைது செய்யப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.