போக்சோ சட்டத்தில் கைதாகும் குற்றவாளிகளுக்கு ஜாமின் 120 நாட்கள் கால நிடிப்பு செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
போக்சோ சட்டத்தில் கைதாகும் குற்றவாளிகளுக்கு ஜாமின் 120 நாட்கள் கால நிடிப்பு செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 8வயது மகள் 3ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஜமில் அகமது என்பவர் சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர் . இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
இதனை குறித்து சிறுமியின் தந்தை உமராபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜமில் அஹமதுவை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் செய்துள்ளனர்.இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.
தமிழகம் முழுவதும் தினசரி பல்வேறு இடங்களில் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வண்கொடுமைகள் மற்றும் படு கொலைகள் போன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடுமையான தண்டனையை தமிழக அரசு வழங்க வேண்டும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் இதில் ஈடுபடுகின்றவர்களை ஓடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கைதாகும் குற்றவாளிகளுக்கு உடனடி ஜாமின் வழங்காமல் குறைந்த பட்சம் 120 நாட்கள் கால நிடிப்பு செய்ய வேண்டும் இதற்க்கான சட்ட திருத்ததை சட்ட சபையில் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .
இவ்வாறு. இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.