அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் காலை 9 மணி அளவில் திமுகவில் இணைந்தார்.
நேற்று டாக்டர் சுப்பையா பாண்டியன் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மனைவியும் திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி தலைவியுமான தமிழரசி சுப்பையா இன்று காலை திருச்சி தில்லைநகரில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அலுவலகத்தில் நேரில் சந்தித்து தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த முறை கிழக்கு தொகுதியில் ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் உட்கட்சி பூசலால் அவர் மாற்றப்பட்டார்.
திருச்சியில் அதிமுக மகளிர் அணியை துடிப்புடனும், வலிமையுடனும் வழிநடத்திச் சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து டாக்டர் தமிழச்சி சுப்பையா விலகியிருப்பது வரும் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்ட அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்