திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தேவகோட்டை கிளம்பிய அரசு பேருந்து சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வரும் போது
பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து (லேணா) அரசு பேருந்தை முந்த வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக வந்து அரசு பேருந்து பின் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதில் முன்னால் சென்ற டாட்டா சுமோ வாகனமும் இந்த மோதலில் சிக்கியது.
திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு இந்த விபத்து நடந்தாலும் போக்குவரத்து போலீசார் அந்த பகுதிக்கு வர 15 நிமிடங்களுக்கு மேல் ஆனதால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்