Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வட மாநில ஊழியர் ஊழியர் கைது

0

'- Advertisement -

இன்று அதிகாலை 12 .30 மணிக்கு முன்பாக திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடம் இருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு தண்ணீர் நிரப்பும் (Water Filling ) வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த கணேஷ் மண்டல் என்பவரின் மகன் நிரஞ்சன் மண்டல் (வயது 38), என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் சதீஷ்குமார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Ad banner

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.