ஆவடி, திருச்சி , திண்டுக்கல்,
தஞ்சாவூர்
மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்.
ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய பி.நாராயணன் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். ஆவடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக காத்திருப்பார் பட்டியலில் இருந்த கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக பணிபுரியும் எஸ்.சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
செங்கற்பட்டு நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு நடுவர் முறை மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய பி.ஜானகி ரவிசந்திரன் தஞ்சாவூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருப்பூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் கே.சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வேலூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சி.விஜயகுமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் இணை இயக்குனராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு நடுவர் முறை மன்றச் செயலாளராக பணிபுரியும் பி.குபேந்திரன் வேலூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த கே.சரவணன் செங்கற்பட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மகளிர் திட்டம் இணை இயக்குனராக பணிபுரியும் பி.விஜயலட்சுமி திருநெல்வேலி நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக பணிபுரியும் பி.அசோக்குமார் மகளிர் திட்டம் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மகளிர் திட்டம் இணை இயக்குனர் எஸ்.பாரிஜாதம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சிகளின் இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனராக (மாநகராட்சிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
காத்திருப்பார் பட்டியலில் இருந்த என்.ரவிசந்திரன் திருப்பூர் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
காத்திருப்பார் பட்டியலில் இருந்த ஜி.கண்ணன் மகளிர் திட்டம் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருநெல்வேலி நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக பணிபுரியும் ஏ.சுல்தானா சேலம் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையாளர் பி.நாராயணன், தஞ்சாவூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் கே.உமாமகேஸ்வரி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனராக பணிபுரியும் அட்சயா ஆகிய 3 பேரும் காத்திருப்பார் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.