Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக விழிப்புணர்வு இயக்கத்தினர் நாளை உண்ணாவிரதம்

0

'- Advertisement -

தண்டி யாத்திரையின் 96 -ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நினைவு யாத்திரை. நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

Ad banner

உப்புசத்தியகிரக தண்டி யாத்திரையின் 96 ஆம் ஆண்டு நிறைவையும், அதில் பங்கேற்ற தியாகிகளின் போராட்ட உணர்வையும் பாராட்டி, நினைவு கூறும் வகையில், திருச்சியில் உள்ள வேதாரணியம் உப்பு சத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கும், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், இன்று காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தினரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளும் பங்கேற்றனர்.

இதன் வரலாறு – காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பு மீது ஆங்கிலேய அரசு வரி விதிப்பு சட்டத்தை கொண்டுவந்தது.

இதில், உப்பு உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி, ‘தண்டி யாத்திரை’ என்ற அறவிழி போராட்டத்தை, கடந்த 1930 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காந்தியடிகள் தொடங்கினார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள தனது ‘சபர்மதி’ ஆசிரமத்திலிருந்து, 240 மைல் தூரத்தில் உள்ள தண்டி நோக்கி யாத்திரையாக சென்ற, காந்தியடிகளுடன், பெருமளவு இந்தியர்களும் இணைந்துக்கொண்டனர்.

தண்டியில் உள்ள ‘தாராசனா சால்ட் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்திற்குள்ளே அத்துமீறி நுழைந்து உப்பெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், காந்தியடிகள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய போராட்டத்தில் நாடுமுழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சியில் இன்று இந்திய விடுதலை குறித்து, உப்பு சத்தியாகிரக போராட்டம், உலகின் பார்வைக்கு கொண்டுசென்றதை இன்று திருச்சியில் நினைவுபடுத்தினார்.

அந்த வகையில் இன்று  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் முன்பாக, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக விழிப்புணர்வு இயக்கத்தினர் ஒன்று கூடினார்கள்.

இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வகணபதி  தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார் மன்னை மதியழகன் யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பொது செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் வேதாரணியம் நோக்கி நினைவு பயணத்தை தொடங்கினார்கள்.தொடர்ந்து நாளை வேதாரணியத்தில் உண்ணாவிரத போராட்டமும், நாளை மறுநாள் உப்பு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.