திருச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழப்பு

திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவர் க.முருகேசன் (வயது 59). இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு திருச்சி – புதுக்கோட்டை சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்துள்ளார் அப்போது சுப்பிரமணியபுரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்
அப்போது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து முருகேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளார்கள்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த எம்.ஏஞ்சல் அருள்தாஸ் (வயது 53) என்பவர் மீது திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

