Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் இங்கிருந்து மாற்றப்படாது, கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரம்.

 

Ad banner

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து, தமிழக அமைச்சர்கள் இன்று காந்தி மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான திருவரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமைகாலை முதலே நடைபயணமாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

 

பிரச்சாரத்தின் போது வியாபாரிகளிடையே பேசிய அமைச்சர்கள், திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக:

திமுக ஆட்சியில் காந்தி மார்க்கெட் இங்கிருந்து மாற்றப்படாது, இதே இடத்திலேயே தொடர்ந்து செயல்படும்” என உறுதி அளித்தனர்.

 

“உங்கள் வியாபாரம் பாதுகாக்கப்படும், உங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” எனக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினர்.

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன் தொகுதி பார்வையாளர் கதிரவன் பகுதி செயலாளர்கள் எஸ்.பி.பாபு, மோகன், டிபிஎஸ்எஸ் ராஜ்குமார், மணிவேல், காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.