கல்வி தொலைக்காட்சியின் காலஅட்டவணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு செய்ய வேண்டும்:மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுறுத்தல்.
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியர்கள் வருகை, புதிய மாணவர்கள் சேர்க்கை, புதியதாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் கல்வித்தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) பதிவேற்றம் செய்தல், கல்வித்தொலைக்காட்சி பயன்பாடு, பள்ளித்தூய்மை, அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டவை உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.