Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

0

'- Advertisement -

மாசித் திருவிழா கோலாகலம்: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி புத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயிலில் நிகழாண்டுக் கான மாசி திருவிழாவை முன் னிட்டு, கோயிலில் பிப்.25-ந் தேதி இரவு காப்புக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9-ந் தேதி மறுகாப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

முதல்நாள் விழாவில் புத்தூர் கிராம மக்கள் தாரை தப்பட்டை, மேளதாளம் முழங்க மலர்களை ஊர்வலமாக எடுத்து வந்து

அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். பின்னர், அம்மனை ஊர்வலமாக புத்தூர் மந்தையில் உள்ள பதுவு கோயில் அருகே கொண்டு வந்து சேர்த்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று,சுத்த பூஜையை முன்னிட்டு அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. வீதிகள் தோறும் வலம் வந்த அம்மனை ஏராளமான பக்தகர்கள் வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடாக் களை பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.பக்தர்கள் கூட்டத்தால் புத்தூர் பகுதியே விழாக்கோலம் கொண்டிருந்தது.

(நாளை 13-ந் தேதி ) மஞ்சள் நீராட்டு விழாவும், 14 – ந் தேதி அம்மன் குடி புகுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தின ரும், ஊர்ப் பொதுமக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.