தமிழகம் முழுவதும் வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தமிழகம் முழுவதும் வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாநில பொது செயலாளர் ஷாஜகான் கோரிக்கை மனு !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இவ்மனுவில் கூறியதாவது.
1) நீட் தேர்வுவினால் தமிழக மாணவர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. எனவே தமிழக மாணவர்களின் உயிர்களை பறிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) சுற்றுலா தளங்களை நம்பி தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கபட்டு வருகிறார்கள். எனவே சுற்றுலா தளங்களை திறந்து சமூக இடைவெளியுடன் மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் .
3) கொரோனா காலத்தில் தொழில் இல்லாமல் அன்றாட குடும்ப தேவைகளுக்கு பொருளாதாரம் இல்லாமல் மக்கள் பாதிக்க பட்டு வருகிறார்கள்.எனவே தமிழக முழுவதும் வீட்டு வரி,குடிநீர் வரி கட்டண தொகையை ஊரடங்கு காலத்தில் உள்ளதை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம் . என்று இவ்மனுவில் கூறியுள்ளார் இந்த நிகழ்வில் மாநில செயலாளர் அயூப்கான், சகாயராஜ் , பக்கீர் மைதீன், சேக்தாவூது மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.