போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.
அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் இன்று (29.01.2026) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முசிறி சரகத்தின் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் நாகராஜன் மற்றும் சுதா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிந்தம்பட்டியின் தலைமை ஆசிரியை அகிலா ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர்.
வருவாய் ஆய்வாளர் அவர்கள் தனது சிறப்புரையில்
“போதைப் பொருளின் பயன்பாடு
தனி மனிதனை மட்டுமின்றி தலைமுறையையே பாதிக்கும் என்றும் எதிர்கால வாழ்வை இருட்டாக்கி விடும் என்றும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர் நாகராஜன் அவர்கள் இளமைப் பருவம் கல்விக்குரியது என்றும் அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும். எதிர்கால சமுதாயத்தை வடிவமைக்க கூடிய மிகப்பெரிய பொறுப்பு மாணவர்களிடமே இருப்பதால் இந்த மாணவப் பருவத்தை போதைப் பழக்கத்திற்குள் முடக்கி விடாமல் சரியான திசையில் வழி நடத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர் சுதா அவர்கள் தனது சிறப்புரையில்
பெற்றோர்கள் பெரிய கனவுகளுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளின் பயன்பாடு அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது.
தனி மனிதன் போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் அது பயன்படுத்துபவரின் உடல் நலனையும் பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் எந்த வகையிலும்
போதைப்பொருளை பயன்படுத்தக் கூடாது என்றும் போதையின் வலையில் சிக்கி தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர்களை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.
பின்னர் அனைவரும் போதைப் பொருளின் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து
பள்ளி மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்ட பேரணி சிந்தம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது .
பேரணிக்கு இடையே மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
பள்ளி மாணவர்களால் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை ஏற்றார். ஆசிரியர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

