தொட்டியத்தில் தொடர் மணல் கடத்தல்.காடுவெட்டி தியாகராஜன் ஆதரவா? இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் முசிறி தொகுதியை இழக்கும் திமுக.
முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பெயரை கூறி மணல் கடத்தல்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளது சின்ன பள்ளிபாளையம். பெரிய பள்ளிபாளையம் இந்த இரு ஊருக்கு இடையில் காவிரியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பாதை அமைத்து மணல் திருடும் மாபியா கும்பல் சுமார் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் மூன்று மாத காலமாக மிகப்பெரிய அளவில் மணல் அள்ளியுள்ளனர்.
இவர்கள் மணல் அள்ளுவதற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தான் காரணம் என கூறப்பட்டது. அவரின் ஆதரவால் தான் மிகப்பெரிய அளவில் மணல் கொள்ளை காட்டுப்புதூர் பகுதியில் அரங்கேறி வருவதாக கூறப்பட்டது.
இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களிடம் தொடர் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மணல் கொள்ளை நடக்கும் இடத்தில் இருந்தே போலீசாருக்கு போன் பண்ணியுள்ளனர். அவர்கள் காலதாமதாக போவதற்குள் இந்த தகவல் மணல் மாபியாக்களிடமே சென்று விட்டதால் , அவர்கள் பல லாரிகளில் விறு விறு என்று மணல் அள்ளி சென்று விட்டனர். பின்னர் தான் ஏதோ பெயர் என்று ஏதோ பெயரளவில், என்று அங்கே நின்ற ஒரு ஜேசிபி மற்றும் மூன்று டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். ஆனால் மறுநாளே, காவல் ஆய்வாளருக்கு மேலதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை அழுத்தம் கொடுக்க, அந்த வண்டிகள் மீது எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக போலீசார் விட்டு விட்டதாக தகவல்.
இது சம்பந்தமாக அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்ட போது..
சார் இந்த மணல் மாபியாக்கள் பின்னணியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனும் அவரது தம்பி ரவியும் தான் இருக்கிறார்கள். ரவி ஆட்கள் தான் மணல் கடத்தலில் ஈடுபட்டார்கள். எங்களால் இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் யார் என்பதை காடுவெட்டி தியாகராஜனுக்கு நிரூபிப்போம் என்றார்கள்.
இது சம்பந்தமாக காட்டுப்புத்தூர் காவல் ஆய்வாளர் அன்னக்கொடியை தொடர்பு கொண்டு கேட்டபோது சார் அவர்கள் பொதுப்பணித்துறை அனுமதியோடு தான் மணல் எடுத்திருக்கிறார்கள்.அவர்கள் மணல் எடுப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் விட்டு விட்டோம் என்றார். ஆனால் நாம் மற்ற காவலர்களிடம் கேட்டபோது, சார் மேலே இருந்து எங்களுக்கு அழுத்தம் வந்ததால் விட்டுவிட்டோம் என்ற தகவலே கிடைத்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது அப்படி ஒரு அனுமதியே கொடுக்கவில்லை என கூறியுள்ளனர்.

பின்னர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனை தொடர்பு கொண்ட போது சார் நீங்கள் நேரிடையாக போய் கேளுங்கள் நான் மணல் எடுத்தேனா என்று, எவனாவது சொல்வதை கேட்காதீர்கள், வாங்க ரெண்டு பேரும் போய் கேட்கலாம். எவனாவது எங்களை சொல்கிறானா… என்று பாருங்கள்.
நான் சட்டமன்றத்தில் இருக்கும்போது மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. நான் தான் அவர்களை காட்டுப்புத்தூர் ஆய்வாளரிடம் சொல்லி பிடிக்க சொன்னேன் என்றவரிடம், பின்னர் நீங்கள் விட சொன்னீர்களா என்று இடை மறித்து கேட்ட போது மழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் நான் எதுக்குய்யா ரீலிஸ் பண்ண சொன்னேன். என் பெயரை சொன்னால் நம்பாதீங்க யாராகா இருந்தாலும் அரஸ்ட் பண்ணுங்க என்று தான் காவல் ஆய்வாளரிடம் சொல்லியிருக்கிறேன் என்றவர், மூன்று டாரஸ் லாரிகள் ஒரு ஜேசிபி ஆகிய வாகனங்களை விடச்சொன்னதை பற்றி மேலும் எந்த தகவலையும் சொல்லாமல், வாங்க என் கார்லயே இரண்டு பேருமே போய் அந்த பகுதியில் நான் மணல் அள்ள சொன்னேனா என்று கேட்போம் என்ற கூறியுள்ளார்.
அனைவரின் கேள்வி இது தான்.சட்டமன்ற உறுப்பினருடன் போய் கேட்டா மக்கள் எப்படி சொல்வார்கள். இல்லை அப்படியே அவர்கள் சொன்னாலும்….என்ன நடக்கும் என்று அவர்களுக்கும் தெரியும். எங்களுக்கு வந்த தவல்களை சொல்லிவிட்டோம். மேலும் இது போல் சமூக விரோத செயல்களில் காடுவெட்டி தியாகராஜன் பெயரை சொல்லி இந்த பகுதியில் நடந்தால், வரும் சட்டமன்ற தேர்தலில் அது திமுகவிற்கு பெரும் பின்னடவை தான் தரும்.

இந்த நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதியை திமுக இழக்க நேரிடும் என அத்தொகுதியை சேர்ந்த உடன்பிறப்புகளே கூறுகின்றனர்.

