முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக இன்று (26.01.2026) கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கல்விக் குழுவினைச் சார்ந்த கோவிந்தராஜ்
செல்வராஜ் பழனிச்சாமி சீரங்கன்
சுப்ரமணியன் மணி ஆகியோர் வருகை தந்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கோவிந்தராஜ் ஆயுதத்தால் பெரும் சுதந்திரத்தை விட அறிவால் பெரும் சுதந்திரமே போற்றத்தக்கது
என்றும் இன்றைய மாணவர்கள் எதிர்காலத்திலே சிறந்த இந்தியாவை வடிவமைக்க பாடுபட வேண்டும். அதற்கான முழு முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பன்முகத்திறமையாளர்களாக தன்னை மாற்றிக் கொண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய தலைவர்களாக உருவாக வேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து குடியரசு தினம் பற்றிய தொகுப்புரையை மாணவன் தன்ராஜ் வழங்கினார். சுதந்திர இந்தியாவில் பெரியாரின் பங்கு பற்றி மாணவி தரணியும் அதனைத் தொடர்ந்து மாணவி கலைச்செல்வியின் பரதநாட்டியமும் அரங்கேறியது. சுதந்திர இந்தியாவின் பெருமைகள் குறித்து மாணவி யமுனா மற்றும் குழுவினர் நடனம் ஆடினார்.

NMMS,TRUST ஆகிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் S.தனுஷ்,S.கேசவன் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியர்கள் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது .

