இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர் தனது மனைவி கமலாவுடன் சாலக்குடியில் இருந்து பொதுப்பெட்டியில் கரூருக்கு பயணம் செய்து வந்தவர் தன்னுடன் எடுத்து வந்த டிராவல் பேக்கை தவற ரயிலில் மறதியாக விட்டவர் கரூர் ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் பெரியக்காள் என்பவரிடம் வாய்மொழி புகாராக கூற மேற்படி காவலர் அவ்வண்டியில் கிரைம் பணியில் இருந்த தலைமை காவலர் சேகர் என்பவரிடம் மேற்படி சம்பவத்தை எடுத்துக் கூற தலைமை காவலர் முன்புறம் உள்ள பொதுப்பெட்டியை சோதனை செய்து தவறவிட்ட டிராவல் பேக்கை கண்டுபிடித்து அதில் இருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை கண்டுபிடித்து தவறவிட்ட வேணுகோபால் மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோரிடம் திருச்சி ரயில்வே காவல் நிலையம் வந்து அவர்களிடம் இன்று நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது.

தவறவிட்ட நகைகளை திரும்ப பெற்ற தம்பதியினர் காவலர்களுக்கு நன்றி கூறி திரும்ப சென்றனர்.

