திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி
கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசில் புகார்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தீபாவளி சீட்டு போட்டு, தொகையை செலுத்தியுள்ளார், பின்னர் பிரபு அந்த தொகையை அவருக்கு திருப்பித் தரவில்லை.
அதைத் தொடர்ந்து, பிரபுவின் சகோதரர் சசிகுமார் அந்தத் தொகையைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார், பின்னர், அந்த பெண்ணும் பிரபுவும் கடந்த 2020 ம் ஆண்டு நண்பர்களாக பழகி கண்டோன்மென்ட் பகுதியில் ஹெல்த் கேர் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் 2020 முதல் 2024 வரை, அப்பெண்ணிடம் இருந்து ரூ.45 லட்சம் பணத்தை சசிகுமார் ஏமாற்றி பறித்து உள்ளார்.
இது குறித்த புகாரின் புகாரின் பேரில் கண்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

