திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழுவின் ஆலோசனைப்படி மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ஜாக்டோ -ஜியோ மாநில உயர் மட்டக் குழுவின் ஆலோசனையின் படி திருச்சி மாவட்டத்தில் இன்று
27.12 .2025 சனிக்கிழமை தோழர் ஆர். முத்து சுந்தரம் இல்லத்தில் (நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட அலுவலகம்) மாவட்ட காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
நீலகண்டன், உதுமான் அலி, பால்பாண்டி ,நவநீதன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் டேவிட் லிவிங்ஸ்டன் மாநாட்டைத் துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கி.மகேந்திரன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு பட்டதாரி -முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநாட்டு கோரிக்கைகள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்/ ஜாக்டோ -ஜியோ உயர் மட்ட குழுக் உறுப்பினர் செல்வராணி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாட்டின் கோரிக்கைகள் போராட்டத்தின் அவசியம், போராட்ட வீயூகங்கள், 10 அம்ச கோரிக்கைகள், பணி நெருக்கடி, ஆசிரியர் தகுதித் தேர்வு நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்கள்.
தோழமை சங்க நிர்வாகிகள் அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார்.
மாவட்ட நிதி காப்பாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

