Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று உச்சத்தை தொட்டு உள்ள தங்கம் ,வெள்ளி விலை நிலவரம் ..

0

'- Advertisement -

தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய நிலையில் பின்னர் சற்று குறைந்தது.

அதன்பின்னர் டிச. 22, திங்கள்கிழமை மீண்டும் தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்தது. அது முதலே நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 235 – க்கும், கிலோவுக்கு ரூ. 1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,35,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.