Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை காலை 10 மணிக்கு எம்ஜிஆரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் திரண்டு வாரீர். அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.

0

'- Advertisement -

பொன்மனச்செம்மல், பாரதரத்னா,டாக்டர் புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,

திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ,முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில்,

 

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்,

திருச்சி தெற்கு மாவட்ட கழக அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில், நாளை (24.12.2025) புதன்கிழமை

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு காலை 10 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது,

இந்த நிகழ்ச்சியில்

மாவட்ட,மாநில ,பகுதி வட்ட ,ஒன்றிய ,நகர, ஊராட்சி , கிளை

கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.