Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

0

'- Advertisement -

சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

 

வேற்று மொழி சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக 80-90-களில் சினிமா கிளப் அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்து, வெளி நாட்டு தூதரகங்களை தொடர்பு கொண்டு (பெரும்பாலும் ஈரான், இத்தாலி மற்றும் பிரெஞ்சு) வீடியோ கேசட் வரவழைத்து, வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று படம் பார்த்து… அதன் பின் அதைப்பற்றி சிலாகிப்பார்கள்.

திருச்சியில் அதேபோல் இயங்கி வந்த கிளப்புகளில் நான் பார்த்தவரையில், வெளிநாட்டு ஆர்ட் படங்களுக்கு பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு பெயர் …மலையாள சினிமாவை சார்ந்த சீனிவாசன்.

ஒரு எமோஷனல் காட்சி.

கதாநாயகன் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறான். கதாநாயகனின் நண்பன் சீனிவாசன். சுவற்றில் ஒரு கண்ணாடி இருக்கிறது. எமோஷனலான அக்காட்சியில், கதாநாயகன் கத்திக்கொண்டிருக்கும் பொழுது சீனிவாசன் தனது பேண்ட் பையிலிருந்து சீப்பை எடுத்து, கண்ணாடியை பார்த்து தலை சீவுவார்.

அதுதான் எதார்த்தம். நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

அதுதான் சீனிவாசன்.

பெரிய நடிகர்கள் இருந்தாலும் இயல்பாக மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.

இப் படத்தில் கதை சீனிவாசன். இது போல் பல படங்களுக்கும் கதை வசனகர்த்தா சீனிவாசன்.

பல மலையாள படங்கள், அனைத்திந்திய மொழிகளிலும் குறிப்பாக தமிழிலும் ரீமேக் (அண்ணா நகர் முதல் தெரு, கோபுர வாசலிலே முதல் njan prakashan வரை) செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியவை.

சீனிவாசன் – பிரியதர்ஷன் – மோகன்லால் combination… legacy and feel good forever ❤️

ட்ரேடு மார்க் சிரிப்பான…உதட்டை கீழ் பக்கம் ஒரு சுழி சுழித்து கள்ள தனமாக சிரிக்கும்….

பல கோடி நபர்களை என்றென்றும் மகிழ்வித்து கொண்டிருக்கும்….

சொர்க்கம் என்று இருந்தால்…அங்கே தெய்வங்களுக்கும் புன்முறுவலை ஏற்படுத்தி கொண்டிருக்கும்..

ஓர் உன்னத கலைஞனுக்கு …..

அவர்க்கு யார், என்ன, என்று அறியாத ஓர் ஊராம்… திருச்சியிலிருந்து ஆழ்ந்த இரங்கல்களை திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.