உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம்
ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்கள் :
பிளவுவாதம் பேசுபவர்களை வீழ்த்தி
திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள்
திமுக ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேச்சு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த முகாமில் சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில்
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது,
குருதிக்கொடை என்பது ரத்தம் கொடுப்பது மட்டுமல்ல அது கொள்கை சார்ந்தது. ஆரியனின் ரத்தும் திராவிடனுக்கும், திராவிடனின் ரத்தம் ஆரியனுக்கும், இஸ்லாமியர்களுன் ரத்தம் இந்துக்களுக்கும் தானம் செய்து எந்த பிரிவினையும் இல்லாமல் மனித உயிரை காப்பது தான் இது.
நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை ஒன்றியத்தில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் முறியடிப்போம் என்றார்.
சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்,
இந்தியாவில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் நிறுவனங்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் குரலை பிரதமரும் உள்துறை அமைச்சரும் நெரிக்கிறார்கள். இந்த சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மேற்கொள்ளும் போர் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான போர் மட்டுமல்ல நாட்டின் ஜனநாயகத்தை சட்டத்தை காக்கும் போர். இதிப் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
திமுக வெற்றிக்கு கூட்டணி பலம் மட்டும் காரணமல்ல தமிழக மக்களின் கருத்தியல் ரீதியான ஒற்றுமையும் தான் காரணம். ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்கள் பிளவுவாதம் பேசுபவர்களை வீழ்த்தி திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள்.
எதிரிகள் பிளவுவாத கருத்துக்களை கூறி வருகிறார்கள் ஆனால் தமிழக முதல்வர் நிதானமாக செயல்பட்டு வருகிறார். நீதியரசரே நிதானம் தவறிய போதும் கூட முதலமைச்சரின் நிதானத்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தக்க பாடத்தை முதல்வர் கற்பித்துள்ளார்.
திமுக கூட்டணியை எதிர்க்க எத்தனை கட்சிகள் வந்தாலும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் எத்தனை முறை தமிழ்நாட்டில் வந்தாலும் அவர்களை தோற்கடிக்கடிப்பதற்கு நாங்களும் தமிழ்நாட்டு மக்களும் தயாராக உள்ளோம்.
சனாதானத்தை உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் அவர் கடவுளை வணங்குவதியோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. சனாதானத்தில் உள்ள ஜாதிய பாகுபாடு பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவற்றை தான் அவர் எதிர்க்கிறார்.
இந்தியாவில் அதிக ஆலயம் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு இங்குதான் மக்கள் அச்சமின்றி வழிபாடு செய்கிறார்கள் திருவிழாக்கள் நடைபெறுகிறது சட்டம் அதற்கு உறுதுணையாக உள்ளது அதனை நாங்கள் பாதுகாத்து இருக்கிறோம். ஆனால் எங்களோடு கொள்கையில் மோத முடியாதவர்கள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
பொய் பிரச்சாரங்களை தமிழக மக்கள் பிரித்தெறிந்து எங்களுக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்றார்.
இந்நிகழ்வில் வண்ணை அரங்கநாதன்,முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன்,சபியுல்லா,செந்தில்,கோவிந்தராஜ் ,
மூக்கன், லீலா வேலு,பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு இ.எம் .தர்மராஜ்,ஏ.எம்.ஜி. விஜயகுமார்,மருந்து கடை மோகன் பாபு மணிவேல், ராஜ் முகமது, நீலமேகம்,பொதுக்குழு உறுப்பினர்கள் K.K.K. கார்த்திக்,வேங்கூர் தனசேகரன், நவல்பட்டு சண்முகம்,ராஜேஸ்வரன், மணிமேகலை பன்னீர்செல்வம் ,கவுன்சிலர் சாதிக் பாட்ஷா,மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.பி.ரகுநாதன்,வர்த்தகர் அணி வாசவி சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

