திருச்சியில் பூங்கா இடத்தை ஆட்டைய போட துடிக்கும் பகுதி செயலாளர் , 25 வது வார்டு திமுக கவுன்சிலருமான நாகராஜனை கண்டித்து சண்முகா நகர் நல சங்க பொதுமக்கள் சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரதம் .
திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில்
மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது .
போராட்டத்துக்கு சண்முகாநகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-
திருச்சி மாநகராட்சி சார்பில் 2023-ம் ஆண்டு உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின் மக்கள் பயன்பாட்டிற்கான பூங்காவை அமைக்க பணிகள் தொடங்க முற்படும்போதெல்லாம் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும் 25 வது வார்டு கவுன்சிலருமான நாகராஜன் திட்டப் பணிகளை தொடங்கவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்.
அவருக்கு இந்த மாநகராட்சி நிர்வாகம், அரசாங்கம் எப்படி துணை போகிறது?.

( எனக்கு அமைச்சர் கே .என் .நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் துணை இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் வகையில் அவர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது)

அரசு நிலத்தை அபகரிக்க துடிக்கும் கவுன்சிலருக்கு இந்த மாநகராட்சி நிர்வாகம் துணை புரிகிறதா ?
இந்த பூங்காவுக்காக பலமுறை மாநகராட்சி மேயர், ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை
மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாததால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டோம்.
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், மீண்டும் பொதுமக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் .
இவ்வாறு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.முத்துமாரி பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சண்முகா நகர் நலச்சங்க தலைவர் எஸ். பி. வேலாயுதன்,
செயலாளர் பி.குமரன்,
பொருளாளர் என். செந்தில்குமார் ,
துணைத் தலைவர் ஆர்.சிவக்குமார் ,
இணை செயலாளர்கள் பொன்ராஜ் ,
எஸ் ஆதவன், ராஜா சிங்கம்
மற்றும் சண்முகா நகர் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு புத்தூர் நான்கு ரோட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பூங்கா இடத்தை சண்முகம் நகருக்கு ஒப்படைக்க வேண்டும் என போராடுபவர்கள் வீட்டிற்கு சாக்கடை தூர்வாரப்படாமல் , மழைநீர் வடிகள் ஏற்படுத்தித் தராமல் என பல தொல்லைகளையும் ஏற்படுத்தி வருகிறாராம் கவுன்சிலர் நாகராஜன். ( கடந்த ஆட்சியில் இவரது மனைவி நளாயினி கவுன்சிலர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது ) இரண்டு டாஸ்மார்க் பார்களை கொடுத்து அமைச்சர் சம்பாதிக்க வழி ஏற்படுத்தித் தந்தும் இது போன்ற பொது சொத்திற்கு இவர் ஆசைப்படுவது ஏன் என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர் ..

